திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி இன்று துவங்கியது.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜீ கார்னர் அருகே திருச்சி-சென்னை மார்க்கத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜன.11-ந் தேதி இரவுபழுது ஏற்பட்டது.சேதமான பாலத்தில் முதற்கட்ட சீரமைப்பு பணிகளை தொடங் குவதற்காக சென்னை ஐ.ஐ.டி.யின் சிவில் இன் ஜினியரிங் துறை கட் டமைப்பு பொறியியல் பேராசிரியர் அழகு சுந்த ரமூர்த்தி ஆய்வு மேற் கொண்டார்.ஐ.ஐ.டி. நிபுணர்களின் அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திடம் சமர்ப்பித்துள்ளனர்.திருச்சி என்.ஐ.டி.நிபுணர் ஒருவர் பாலத்தை வலுப்படுத்துவதற்கான குறுகிய கால தீர்வையும் சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி பாலம் கட்டு மான பணிகளில் அனுப வம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் அருகே பாலத்தின் சேதமடைந்த பகுதியில் வலுப்படுத்தும் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.மேலும் பாலத்தில் மண்அரிப்பு ஏற்பட்ட பகுதியைவலுப்படுத்த மணல் நிரப் பும் முறை மாற்றியமைக் கப்படுகிறது.பொங்கல் பண்டிகை விடுமுறையாக இருந் தாலும் நவீன இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை பயன்படுத்தி சீரமைக்கும் பணிகளை தொடங்கி நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.