திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வருவது தொடர் கதை ஆகி வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணியிடம் சோதனை நடத்திய போது அவர்கள் கொண்டு வந்த வீல் வைத்த ரோலர் பை பீடிங்கில் வயர் வடிவில் சுமார் 1 கிலோ 15 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு ரூ.61 லட்சத்து 56 ஆயிரத்து 990 மதிப்புள்ள 1 கிலோ 15 கிராம் .இதனை கடத்தி வந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.