Rock Fort Times
Online News

தமிழக கல்வி அமைச்சர் குறித்து  அவதூறு : வி.சி.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்கு

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் இளந்தமிழன் மற்றும் அவரது நண்பர் சந்திரசேகர் ஆகிய இருவரும் கடந்த இம்மாதம் 1-ம் தேதி திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் அவதூறு தகவல்களை பரப்பியதாக புகார் எழுந்தது. இது குறித்து பெல் ஒப்பந்த தொழிலாளர் தொ.மு.ச.துணைச் செயலாளர் மோகன்ராஜ் பெல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளந்தமிழன் , சந்திரசேகர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்