சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கபாளையம் கனிஸ்கர் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்திருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையின் அறைக்குள் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. தயாரித்த பட்டாசுகளை வெடித்துப் பார்த்து சோதனை நடத்திய போது அருகில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கடையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.