திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் நாளை(நவ.30) எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம்…* வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) இம்மாதம் நவம்பர் 4ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான படிவத்தை நிரப்பி கொடுப்பதில் வாக்காளர்களுக்கு சில சந்தேகங்களும், சிரமங்களும் இருக்கின்றன. பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எஸ்.ஐ.ஆர்.சிறப்பு முகாம்கள் நாளை (30.11.2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து படிவங்களை பூர்த்தி செய்து இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன். இதற்கான பணியில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.