எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகமா?- திருச்சி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் நாளை(நவ.30) நடக்குது உதவி மையங்கள்…!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதில் சிலருக்கு சந்தேகமும், சிரமமும் இருக்கிறது. இதனால் இன்னும் பலர் எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காமல் இருக்கின்றனர். அவர்களின் நலன் கருதி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் நாளை(30-11-2025) உதவி மையங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் இம்மாதம் 04.11.2025 முதல், சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (30.11.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படவுள்ளது. எனவே, கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் அனைவரும் இந்த உதவி மையங்களை பயன்படுத்தி கொண்டு, படிவங்களை பூர்த்தி செய்து அதனை மீள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்திடுமாறு
கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.