தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த 4-ந் தேதி தொடங்கியது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது, “சேலம் மாவட்டம் வாக்காளர் பட்டியல் – சிறப்பு தீவிர திருத்தம் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 கணக்கீட்டு படிவத்தினை தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டீர்களா?” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comments are closed.