வியாபாரிகளிடம் ஆலோசித்து திருச்சி, பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட்டில் கடைகள் கட்ட வேண்டும்- காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்!
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சி -தஞ்சை ரோடு தனரத்தினம் நகரில் வலிமா மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இங்கிலீஷ் காய்கனி, நாட்டு காய்கனி, தக்காளி, வெங்காயம், உருளை ,சேனை, கருணை கிழங்கு, மாங்காய், தேங்காய், பூ புஷ்பம், பழக்கடைகள் என பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பஞ்சப்பூரில் புதிதாக அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் அமைய உள்ள காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும் வரை நமது காந்தி மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், தற்போது யார், யார் எந்தெந்த வியாபாரம் செய்து வருகிறோமோ அதே நிலையில் தொடர்ந்து வியாபாரம் செய்வது. புதிதாக அமைய உள்ள காய்கறி மார்க்கெட் கட்டிட வேலைகள் தொடங்கும் முன் (கள்ளிக்குடி மார்க்கெட் போல் ஆகிவிடாமல்) எங்களது சங்கங்களின் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து எந்தெந்த வியாபாரத்திற்கு எவ்வளவு சதுர அடி தேவைப்படும் என்பது குறித்து ஆலோசனை கேட்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ADVERTISEMENT…👇
Comments are closed.