தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500- க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங். இவர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம்
கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு உடற்கல்வி ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ்,தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவாகி விட்டார். அவரை கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் திருச்செந்தூர் அழைத்து வருகின்றனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.