பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, இதுவரை 46 வழக்குகள் பதிவு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
திருச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இதுவரை 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்படாததால் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளார்கள். இது தொடர்பான முழுமையான அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும்.எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் கருத்து மட்டும் கூறியுள்ளார். வெற்றியோ, தோல்வியோ மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மக்களை சந்திப்பதற்கே யோசிக்கும் அவர் எப்படி கருத்து மட்டும் கூறுகிறார்.திமுக வரலாற்றில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் மக்களை நேரடியாக சந்தித்துள்ளது என்று கூறினார்.
Comments are closed.