திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கிலும், திருச்சி, தஞ்சை உள்பட பல்வேறு பகுதிகளில் பெண் வேடமிட்டு திருநங்கை போல் நின்று கொண்டு பலரிடம் வழிப்பறி செய்ததாக சாரங்கன் (32) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது, அங்குள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண் காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத் தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணையத்தில், சாரங்கன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுப்புராமன் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, சிறை காவலர் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். தற்போது டி.ஐ.ஜி., ஜெயபாரதியை வேலுார் பயிற்சிப் பள் ளிக்கு டி.ஐ.ஜி.,யாகவும், கண்காணிப்பாளர் ஆண்டாளை, திருச்சி நவல்பட்டு பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பா ளராகவும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.