சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிரிட்டோ(55) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை 6ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தபோது மாணவியை பிரிட்டோ ஆடையை கிழித்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோர், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேல் விசாரணைக்காக அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரிடம் பிரிட்டோ கூறுகையில், அந்த மாணவி எழுதிக் கொண்டிருந்தபோது கையில் ஒரு பேப்பரை வைத்திருந்தார், அதை கேட்டபோது கொடுக்கவில்லை. அதை வாங்கிய போது கை தவறி அவரது மேல் சட்டை கிழிந்தது. அவரை வீட்டிற்கு சென்று வேறு சட்டை மாற்றி வருமாறு கூறினேன் என்றார். பின்னர் மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் பிரிட்டோவை போக்சோவில் கைது செய்தனர். மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.