கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கண்காணிக்கும் பணியில் தமிழக சட்டம் – ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரின்பேரில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை குறிப்பிட்டு தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் பெ. அமுதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ராஜேஷ் தாஸை குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி, கட்டாய ஓய்வில் அனுப்பும்படி குறிப்பிட்டுள்ளார். அதில் உடன்பாடு இல்லை என்றால் ராஜேஷ் தாஸ் அரசிடம் முறையிடலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.