திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வெள்ளை கோபுரம் அருகே ஹோட்டல் மற்றும் மெட்டல் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.இது தொடர்பாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல ஸ்ரீரங்கம், மேலூரில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து ரூ.2000 பணமும் அம்மா ண்டபம் சாலையில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் திருட்டு முயற்சியும்நடந்துள்ளது.மங்கம்மாள் நகரில் செல்போன் கடையில் திருட்டும், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள சலூன் கடையில் ரூபாய் 5000 பணமும் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவதை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், இப்பகுதியில் ஒரே இரவில் 3க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.