Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு சம்பவம்: வீட்டுமாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை- காதலன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை…!

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய் ஸ்ரீ (வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா, அந்தப் பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். அவர்களில் 2 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர்கள் அந்தப் பெண்ணை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்