விஜய் கட்சியை பா.ஜ.க.வுக்கு இழுக்கவே செங்கோட்டையன் அனுப்பப்பட்டு இருக்கிறார்…- சொல்கிறார் அமைச்சர் ரகுபதி…!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று( நவ. 27) விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் குறித்து திமுக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம். அவர் அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றும் அமித்ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக் கொண்டிருப்பவர். அவரால் தவெகவை பாஜவுக்கு இழுத்துக் கொண்டு வர முடியும். அவர் அதற்கான அசைன்மென்ட்டில் தான் அனுப்பப்பட்டிருப்பார் என்பது எங்களின் கருத்து. கட்சியை விட்டு ஒரு தலைவர் வரும்போது, மற்ற கட்சிகள் அழைப்பது இயல்புதான். செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தபோது, அவரை அமைச்சர் சேகர் பாபு நட்பு ரீதியில் கட்சிக்கு (திமுக) அழைத்திருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்பதால்தான் வரவில்லை” என்று கூறினார்.

Comments are closed.