Rock Fort Times
Online News

செங்கோட்டை-திருச்சி விரைவு ரயில் சேவையில் மாற்றம்…!

பொறியியல் பணிகள் காரணமாக செங்கோட்டை ரயிலின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், செங்கோட்டை -திருச்சி விரைவு ரயிலானது (16848) ஏப்ரல் 10-ம் தேதி கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கூடுதலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக, மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வருகிற 30-ம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிர்த்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். கூடுதலாக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மதுரை – பிக்கானீர் அனுவரட் அதிவிரைவு ரயிலானது (22631) ஏப்ரல் 10-ம் தேதி மதுரையிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்குப் பதிலாக 40 நிமிடங்கள் தாமதமாக 12.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்