தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆனால், மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் எம்பிக்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் எங்களுக்கு மரியாதை தரவிட்டால் திருப்பி அடிப்போம் என்று மாணிக்கம் தாகூர் எம்பி பேசியது மீண்டும் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவசர பயணமாக இன்று (16.02.2026) டெல்லி செல்ல உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் செல்வபெருந்தகையின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.