Rock Fort Times
Online News

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி திருச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்…!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிர போராட்டம் மாவட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கலந்துகொண்டு பேசினார். நிர்வாகிகள் நவீன் குமார், ராஜ்குமார், ரங்கராஜ், விஜயராகவன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் அறிக்கையின்படி 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதிய பலன் கிடைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற செப்டம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்