Rock Fort Times
Online News

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி மாநாடு!

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே-5 வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில், திருச்சி ஃபெமினா அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி துவக்கவுரை நிகழ்த்தினார். மேலும் இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம். ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, மாநில செயலாளர் ரத்தினம், வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர்கள் கலீல் ரஹ்மான், பாத்திமா ஸ்டீல் முகைதீன், ஜோதி பேக் அஜ்மல் கான், மாநில பொருளாளர் அன்சர் குரூப் அப்துல் சமத், மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், அரபாத், லோகநாதன், கமால் பாட்ஷா, ஸலாஹூத்தீன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, ஹஸ்ஸான் பைஜி, வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாதிக், சேக் சாலி, குடந்தை இப்ராஹீம், திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். அதேபோல் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொக்கையா சேக் முகமது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி. முத்து ரத்தினம், தொப்பி வாப்பா குழும நிறுவனர் உமர் முக்தார், BNI திருச்சி மூத்த இயக்குனர் நாகப்பா ஸ்டோர் இயக்குனர் திரு.LN SP ரவி ராமசாமி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் வணிகர்கள் நலன் சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்