Rock Fort Times
Online News

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன..

மாணவர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்..

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பிளஸ் -1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் வரை நடந்தது. மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளும் இதே நாளில் திறக்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, இன்று ( 12.06.2023 ) 6 முதல் பிளஸ் -2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

               

திருச்சி மாவட்டத்தில் இன்று  அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மத்திய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலசன் என 298 பள்ளிகள், 242 உயர்நிலைப்பள்ளிகள், 294 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 834 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்