திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்த அழகப்பன் மகள் ஜெகஜோதி. இவர் மேலப்புதூரில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும்போது ஸ்ரீரங்கத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் சென்ற தனியார் பேருந்து ஒன்று இவா்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரத்தில் மாணவி ஜெகஜோதி சிக்கி கொண்டனா் . அதில் பேருந்து அவா் மீது ஏறி இறங்கியது . அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி ஜெகஜோதி உயிரிழந்தார். ஜெகஜோதியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனியாா் பேருந்து மோதி மாணவி உயிா் இழந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.