மணப்பாறை பகுதியில் ரூ 2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்…* காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு க. ஸ்டாலின்..!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வடக்குசேர்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 115 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு போதிய கட்டிட வசதியின்றி மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கென ரூ.2.11 கோடி மதிப்பில் 8 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா இன்று( பிப்.26) நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குத்துவிளக்கேற்றினார். புதிய கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.