முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை தெரிவிப்பேன் என்று சசிகலா அறிவித்து இருந்தார். அதன்படி ராமநாதபுரத்தில் இன்று(பிப்.24) பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். மேடைக்கு வந்த சசிகலா முதலில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், என்னால் முதலமைச்சர் ஆன ஒருவரை பற்றி நான் கூற விரும்பவில்லை. அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை. அவர் யாரென்று உங்களுக்கே தெரியும் என்று கூறினார். எதிரிகளை, துரோகிகளை வேரறுக்க புதிய கட்சி தொடங்க போகிறேன். அதற்கான பெயர் பின்னர் அறிவிக்கப்படும். ஆனால் கொடியை அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறி கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் மேல் புறத்தில் கருப்பு, நடுவில் வெள்ளை, கீழ்புறம் சிவப்பு கலர் அமைந்திருந்தன. நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

Comments are closed.