விநாயகருக்கான மிக எளிய, ஆனால்
மிகவும் பலமுள்ள விரதம் இந்த சங்கடஹர
சதுர்த்தி விரதம். பௌர்ணமிக்கு அடுத்து
வரக்கூடிய நான்காவது நாள் சதுர்த்தி நாள்.
இன்று மாலையும் இரவும் சேரும்
நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்
யப்படுகிறது.
எளிதானஅருகம்புல்லையும்,உலர்ந்த
பழங்களையும் வைத்து விநாயகப்பெருமானுக்கு பூஜை செய்வதன் மூலமாக, பாவங்கள் தொலையும். குடும்பத்தில் சுபிட்சம்
தலைதூக்கும்.
சுபத் தடைகள் விலகும். எண்ணிய
காரியங்கள் வெற்றியாகும். உடலில்
உள்ள நோய்கள் குணமடையும். ஆரோக்
கியம் மேம்படும். நிலையான சந்தோஷம்
கிடைக்கும்.
அறிவும், ஆயுளும், செல்வமும் அதிகரிக்
கும். குறிப்பாக சனிதோஷத்தால் பாதிக்
கப்படுபவர்களுக்கு இந்த விரதம் மிகுந்த
நற்பலனைத் தரும்.
இன்று மாலை பிள்ளையார் கோயிலுக்
குச் சென்று, அர்ச்சனை செய்யலாம். மோத
கம், சித்ரான்னம், பால், தேன், பழ வகை
கள், சுண்டல் முதலியவற்றை விநாயகருக்கு
நைவேத்தியம் செய்யலாம்.
