Rock Fort Times
Online News

சமயபுரம் மாாியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை!

சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 336-ம், 2 கிலோ 867 கிராம் தங்கமும், 6 கிலோ 815 கிராம் வெள்ளியும், அயல் நாட்டு பணம் 82-ம், அயல்நாட்டு நாணயங்கள் 453-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்