Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை…!

சிங்கப்பூரிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலேசியாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் அவரது கைப்பையில் சுமார் 1 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது . அவற்றுக்கான ஆவணங்களோ, உரிய அனுமதியோ அவரிடம் இல்லை. இதனையடுத்து அந்த தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 60.95 லட்சமாகும். இதேபோல, சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பயணி ஒருவர் 330 கிராம் பசை வடிவிலான தங்கத்தையும், 80 கிராம் தங்க சங்கிலியையும் தனது உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 26.62 லட்சமாகும். அவற்றை பறிமுதல் செய்ய சுங்கத்துறையினர் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்