Rock Fort Times
Online News

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை! விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது பங்கேற்றிருக்க வேண்டும்.மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான, பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், மாத வருமானம் ரூபாய் 6000 ஆகவும், வரும் 31ஆம் தேதி 58 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள், நகலுடன் அசல் சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்