திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், பக்ரைன், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல மேற்கண்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.இந்தநிலையில் நேற்று ( 19.10.2023 ) சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் கொண்டுவந்த உடையில் ஒரு பேண்ட் பாக்கெட்டில் பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 909.500 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 55.07 லட்சம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. அந்த தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்? யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.