வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விவசாய ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் விவசாயிக்கு, பரிசுத்தொகை ரூ.2 இலட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தை சார்ந்த தகுதியுள்ள விவசாயிகள், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், திருச்சி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று விவரங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் 25.04.2023 க்குள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலக தொலைபேசி எண். 0431-2422142 மற்றும் வேளாண்மை அலுவலர் -9551878179ஐ தொடர்பு கொள்ளுமாறு திருச்சி வேளாண் வணிகம் துணை இயக்குநர் கு. சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.