ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விஷச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று இறந்த மாடுபிடி வீரர்களுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்குவது விளையாட்டு வீரர்களை அவமதிப்பதாக உள்ளது. ஏன் இந்த பாரபட்சம்? எனவே, ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் களத்தில் உயிரிழந்தால் குறைந்தபட்சம்
ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் திமுக கூட்டணி உடைந்து போய்விடுமோ என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. எனவே, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்களோ? என்ற சந்தேகம் உள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.