திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ்சிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட இ.பி.ரோடு பகுதியில் போதை பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (வயது 58)
நாகராஜ் (52) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் 12 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (40), மேலசிந்தாமணியை சேர்ந்த சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். தில்லைநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென்னூர் ரகுமானிய புரத்தில் போதை பொருட்களை விற்பனை செய்த ஷகில் சல்மாத் (36) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 65 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஆகும். பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.