Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி கமிஷனருக்கு ராயல் சல்யூட் – கொண்டாடும் சுந்தர் நகர் மக்கள் (வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 60-வது வார்டு, சுந்தர் நகர் 5-வது கிராஸ் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. முக்கிய பிரமுகர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக
குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்ததும் தெருவில் உள்ள “மேன்ஹோலை” சரிவர மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த “மேன்ஹோல்” திறந்தே கிடப்பதால் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் போதும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வீடு திரும்புபவர்கள் சிரமத்தை சந்தித்து வருவதாக ராக்போர்ட் டைம்ஸ் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. பொதுமக்களின் நலன்கருதி ராக்போர்ட் டைம்ஸின் சமூக வலைதளத்தில் வீடியோவுடன்
இன்று (19-11-2024)மதியம் 1-10 மணி அளவில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக திருச்சி மாநகராட்சி கமிஷனர் வி.சரவணன் ஐ.ஏ.எஸ். ஊழியர்களை அழைத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று மேன்ஹோலை மூட உத்தரவிட்டார். அதன்பேரில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுமாலை 4 மணி அளவில் மேன்ஹோல் குழியை சிமெண்ட் கலவை மூலம் மூடினர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்தில் இந்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி கமிஷனர், வேற லெவல் ஆபிசர் என மகிழ்ச்சி தெரிவித்து கொண்டதோடு அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நீடூழி வாழ வேண்டும் என மனதார வாழ்த்தினர். மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து உடனே செய்தி வெளியிட்டு உதவிய ராக்போர்ட் டைம்ஸ் நிர்வாகத்தினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்