ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னையில் ரோட்டரி இந்தியாவின் தலைமைத்துவ மாநாடு- * பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் முருகானந்தம்…!
சென்னையில் வருகிற ஆக.22 ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் (தேர்வு) எம். முருகானந்தம் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்னாட்டு ரோட்டரி இன் முக்கிய மதிப்புகளில் ஒன்று தலைமைப்பண்பு வளர்த்தல். இதனை கொண்டாடும் விதமாக லீட் 2025 என்ற பெயரில் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து 5000 ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். பிரேசிலைச் சேர்ந்த பன்னாட்டு ரோட்ட ரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரியோ சீசர் மார்டின்ஸ் டி கமார்கோ, பல முன்னாள் மற்றும் தற்போதைய பன்னாட்டு ரோட்டரி இயக்குநர்கள் மற்றும் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் 2029 அல்லது 2031ம் ஆண்டுகளில் ரோட்டரி சர்வதேச மாநாட்டை நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.ரோட்டரி 120 ஆண்டு கால வரலாற்றில் இந்த மதிப்பு மிக்க உலகளாவிய நிகழ்விற்கு இந்தியா பரிசீலிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த அறிவிப்பு இந்திய ரோட்டரி சங்கங்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை 2030 ஆம் ஆண்டில் பன்னாட்டு ரோட்டரியில் முதலிடம் வகிக்க பணியாற்றுவோம் என்றார்.
Comments are closed.