Rock Fort Times
Online News

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் ரோட்டரி சங்க இயக்குனர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பு… * ரோட்டரி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

ரோட்டரி சங்கத்தின் 4, 5, 6, 7 ஆகிய மண்டலங்களின் சார்பில் லீடர்ஷிப் கான்க்ளேவ் மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்து தருமாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை ரோட்டரி சர்வதேச இயக்குனர் எம்.முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

மாநாட்டில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதி அளித்ததாக முருகானந்தம் தெரிவித்தார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்