Rock Fort Times
Online News

திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…* மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்…!

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட் )திருச்சி மண்டலம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று(30-01-2026) நடைபெற்றது. பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட சிறப்பு நீதிபதி கார்த்திகா, சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி பிரபு, நீதிபதிகள் சாமிநாதன், நசீர் அலி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஷ்குமார், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பி. கணேசன், துணைத்தலைவர் வடிவேல்சாமி, செயலாளர் முத்துமாரி, இணை செயலாளர் விக்னேஷ், பொருளாளர் சதீஷ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் வெங்கட், துணைத்தலைவர் சசிகுமார், போக்குவரத்து கழக திருச்சி மண்டல துணை மேலாளர்கள் புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்), ராஜேந்திரன் (கட்டிடம்) மற்றும் வழக்கறிஞர்கள், திருச்சி சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள், நவலூர் குட்டப்பட்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்