மணிப்பூரில் கடந்த மே மாதத்திலிருந்து இரு பிரிவினருக்கு இடையே வன்முறை நடந்து வருகிறது. இந்த கலவரம் காரணமாக இதுவரை 160 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதால் வன்முறை மேலும் அதிகரித்தது. நேற்று ( 04.08.2023 ) இரவு மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். கலவரத்தில் குக்கி இன மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நேற்று 6 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி துப்பாக்கி சூடு, தீ வைப்புகளும் நடந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.