திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 70). தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் கடந்த 26 ம் தேதி வரலட்சுமி பூஜை நடந்தது. அப்போது பழனிச்சாமி எதிர்பாராத விதமாக வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். மீண்டும் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானைந்தம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.