இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்…!
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், மாபெரும் மீலாது நபி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் நடைபெற்றது. அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் சாதிக் பாஷா, நபிகள் நாயகத்தின் பண்புகளையும், இன்றைய அரசியல் சூழல் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், திருச்சி மாநகர் மாவட்ட, அதிமுக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், நத்ஹர்வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலர் அல்லாபக்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில், அதிமுகவுடன் இணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது. இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5% லிருந்து 5% சதவீதமாக உயர்த்த வலியுறுத்துவது. 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய ர்களை விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்க கோரி முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனி சாமியிடம் மனு கொடுப்பது. விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமான குறைந்தபட்ச உற்பத்தி பொருள் விலை நிர்ணயம் செய்ய குரல் கொடுப்பது. நாடாளுமன்ற தேர்தலில் சிஏஏ வை எதிர்ப்பது மற்றும் ரத்து செய்ய அனைத்து மக்களிடமும் ஆதரவு கேட்பது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தி மக்களாட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அகில இந்திய முஸ்லிம் லீக் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மஹது, மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது யூசுப், மாவட்ட பேச்சாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.