திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தின விழா…- சிறப்பாக பணியாற்றிய 4 மகளிர் நடத்துனர்களுக்கு பரிசு!
இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் பொது மேலாளர் டி. சதீஷ்குமார் இன்று (26-01-2026) தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு திருச்சி மண்டலத்தில் அதிக வருவாய் ஈட்டிய நான்கு மகளிர் நடத்துனர்களுக்கு அவர்களது திறமையை பாராட்டி பரிசுகளை வழங்கினார். விழாவில், துணை மேலாளர்கள் ராமநாதன்( பணியாளர் மற்றும் சட்டம்), புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்).சுரேஷ் குமார் வணிகம்), ராஜேந்திரன்( கட்டிடம் ) மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.