Rock Fort Times
Online News

திருச்சியில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி…

துணை மேயர் திவ்யா தனக்கோடி பார்வையிட்டு ஆய்வு...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. இந்த பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் மழை காலங்களில் மழை நீருடன், சாக்கடை நீர் கலக்காமல் தடுக்கப்படும். இந்தநிலையில், திருச்சி பாலக்கரை மேம்பாலம் கீழ் உள்ள சாலையில்  பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொக்லின் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த சீரமைப்பு பணிகளை மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி மண்டலம் 2 -ன் தலைவர் ஜெயநிர்மலா, இளநிலை பொறியாளர் ராஜா சுந்தர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்