Rock Fort Times
Online News

திமுகவில் அதிரடி மாற்றம்: 77-லிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிப்பு… * திருச்சிக்கு 4 மாவட்ட செயலாளர்கள்..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு கட்சி நிர்வாகிகளிடையே கருத்து கேட்கப்பட்டது. அந்த நிர்வாகிகளின் கருத்து கோப்பு தலைமை கழகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திமுகவில் அதிரடி மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கழகத்தில் 70 வயதை தாண்டிய மாவட்ட செயலாளர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்க அண்மையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சி ரீதியாக 77 மாவட்டங்களிலிருந்து 110 மாவட்டங்களாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பை இன்றைய தினம்(28-08-2026)
அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என தொகுதி வரையறை செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, திருச்சி மாவட்டத்திற்கு ஏற்கனவே
3 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் தற்போது நான்காவதாக ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட உள்ளார்.,

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்