ராஜ்ய சபா சீட்’: “அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை… நேரம் வரும்போது அனைத்தையும் சொல்வேன்!” – தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்
மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக தேமுதிக பொதுக்குழு அங்கீகரித்திருக்கிறது. கூடவே, கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷையும் தேர்வு செய்திருக்கிறார்கள். வெற்றிக் கூட்டணியில் இடம் பிடிப்பது, கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட சவால்களை தேமுதிக-வும் எதிர்க்கொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் புதிய பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 2024 மக்களவைத் தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம். தற்போது அதிமுக-வும், பாஜக-வும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அக்கூட்டணியில் தொடர்வதா…வேண்டாமா…என்பதை எங்களது பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் முடிவு செய்வார். ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார். தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன் என்று கூறினார்.
Comments are closed.