தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. இதற்கு திமுக சார்பில் என்.சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் கும், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீசும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதேபோல அதிமுக சார்பில் தம்பிதுரையும், பாமக சார்பில் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 09) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி, “தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்களை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தேமுதிக சார்பில் முதன்முறையாக எல்.கே.சுதீஷ் டெல்லி செல்லவுள்ளார். அதேபோல், திருச்சி சிவா, தம்பிதுரை ஆகியோர் அதிகமுறை மாநிலங்கவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.