தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்..அப்போது அவர் ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் ஒன்று தான். படிப்படியாக உழைத்து வெவ்வேறு பதவிகளை வகித்து இப்போது முதல்வராகியிருக்கிறார் என்றால், அது மக்கள் அவரின் உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம் என்று கூறினார். நடிகர் ரஜினியுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு, புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
