Rock Fort Times
Online News

மழை வெள்ள பாதிப்பு: மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி நிதி கேட்போம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஏற்கனவே பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். மிக்ஜாங் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் மழை பதிவாகியுள்ளது. தற்போது பெய்த மழை கடந்த காலத்தை விட அதிகம். அரசின் நடவடிக்கையால் வெள்ள பாதிப்பு வெகுவாக குறைந்தது. 9 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மழை நிற்பதற்கு முன்பாகவே வெளிமாவட்ட தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி கேட்க உள்ளோம். அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். சென்னையை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களால் மக்கள் இன்னல்களுக்கு ஆளானாலும், அவர்களை அதிலிருந்து மீட்கும் நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஒரு வாரத்திற்குள் அனைத்தும் சரி செய்யப்படும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக உபரிநீர் திறக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மழை பாதிப்பை அரசியலாக்க நான் விரும்பவில்லை. மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். 75 சதவீத இடங்களில் மின்விநியோகம் சீரானது. மீதமுள்ள 25 சதவீதம் நாளைக்குள் வழங்கப்படும் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்