Rock Fort Times
Online News

5 ஆண்டுகள் நன்றாக பணிபுரிந்த கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த ரயில்வே அறிவுறுத்தல்…!

5 ஆண்​டு​கள் நன்​றாக பணி​யாற்றிய கேட் கீப்​பர்​களை இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் பணி​யமர்த்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. கடலூர் மாவட்​டம், ஆலப்​பாக்​கம் ரயில்வே கேட் பகு​தி​யில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாக​னம் மீது விழுப்​புரம் – மயி​லாடு​துறை பயணி​கள் ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தை தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​திகளில் பாது​காப்பு அம்​சங்​களை மேம்படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்நுட் பத்​துக்கு மாற்​றப்​ப​டாத லெவல் கிராசிங் கேட்​களை தினசரி ஆய்வு செய்​வது உட்பட பல்​வேறு உத்​தர​வுகளை ரயில்வே துறை பிறப்​பித்​துள்​ளது. இதற்​கிடை​யில், தெற்கு ரயில்​வேக்கு உட்​பட்ட ரயில்வே கேட்​களில், ரயில்வே பாது​காப்பு அதி​காரி​கள் இரவு நேரத்​தில் திடீர் சோதனை நடத்​தி, சரி​யாக பணி​யாற்​றாத கேட் கீப்​பர்​கள் மீது நடவடிக்​கை எடுத்து வரு​கின்​றனர். அதேசம​யம், லெவல் கிராசிங் கேட்​டில் பாது​காப்பை மேம்​படுத்​து​வது தொடர்​பாக, தெற்கு ரயில்வே தலை​மையகத்​தில்
ஆலோ​சனைக் கூட்​டம் தொடர்ந்து நடை​பெற்று வந்​தது. இதில் ரயில்வே கேட் அமைந்​திருக்​கும் லெவல் கிராசிங் பகு​தி​களில் பாது​காப்பை மேம்​படுத்​து​வதற்கு 11 முக்​கிய நடை​முறைகளை பின்​பற்​றும்​படி இந்திய ரயில்வே உத்​தர​விட்​டுள்​ளது. குறிப்​பாக, அனைத்து ரயில்வே கேட் பகு​தி​களி​லும் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​து​வது, அனைத்து கேட்​களை​யும் இன்​டர்​லாக்​கிங் முறைக்கு மாற்​று​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்​நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத ரயில்வே கேட் களை நாள்​தோறும் ஆய்வு செய்​வது, லெவல்​கி​ராசிங்​கு​களை அகற்ற சுரங்​கப்​பாதை, மேம்​பாலம் அமைக்க கட்​டு​மானத்தை துரிதப்​படுத்​து​வது ஆகியவை தொடர்​பாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.இதை செயல்​படுத்​து​வது குறித் தும் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது. அப்​போது பேசிய தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்.சிங், “தெற்கு ரயில்​வே​யில் 5 ஆண்​டு​கள் நன்​றாக பணி​யாற்​றிய கேட் கீப்​பர்​களை இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்களில் பணியமர்த்த வேண்​டும். 100 மீட்​டர் தொலை​விலிருந்து லெவல் ​கி​ராசிங் கேட்​களை பார்க்​கும்​போது மிகத் தெளி​வாக இருக்​கவேண்​டும். மரக்​கிளை​கள், புதர்​கள் ஏதாவது இருந்​தால் அவற்றை அகற்ற வேண்​டும். அதி​காரிகள் அவ்​வப்​போது ஆய்வு செய்ய வேண்​டும்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்