Rock Fort Times
Online News

பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங்கை பதவி நீக்கம் செய்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏ. ஐ.ஒய்.எப்.) இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் முன் திரண்டனர்.
போராட்டத்துக்கு ஏ. ஐ.ஒய்.எப். மாவட்ட செயலாளர் செல்வகுமார், என்.எப்.ஐ.டபிள்யூ. மாவட்டச்செயலாளர் அஞ்சுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் க.சுரேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட தலைவர்கள் பார்வதி (என்.எப்.ஐ.டபிள்யூ.), முருகேசன் (ஏ. ஐ.ஒய்.எப்.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் சுரேஷ் முத்துசாமி, ஆயிஷா, விஸ்வநாத், காஜா, சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ரெயில் மறியல் நடத்த ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 40 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்