திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா மையம்.இயற்கை எழில் சூழ்ந்த புளியஞ்சோலை பகுதியில் சிறிய சிறிய அருவிகளும் உள்ளன. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வது வழக்கம். தற்போது கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆற்றில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காட்டாற்று வெள்ளம் குறைந்த பிறகு குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.