Rock Fort Times
Online News

கேள்விக்குறியாகும் சுகாதாரம் ஆழ்வார்தோப்பு மக்கள் திடீர் மறியல் !

திருச்சி பாலக்கரை ஆழ்வார் தோப்பு பகுதியில் சுற்றி கொசு பிரச்சனை காரணமாக பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாய நிலை நீடிக்கிறது இரவில் அதிகமாக கொசு தொல்லை இருந்து வருகிறது மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் முறையாக அப்பகுதியில் கொசு மருந்து அடிக்காமலும் , ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள வாய்க்கால் கழிவு குப்பைகள் நிரம்பி கிடப்பதை சுத்தம் செய்யாததை கண்டித்தும் பாலக்கரை ரவுண்டானாவில் 100 க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தின அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினார். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். கொசு மருந்து மற்றும் தூய்மை பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர் அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் அ கலைந்து சென்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்